கிரிக்கெட்டில் யூத் சென்டர் வெற்றி பிரசிடென்சி கல்லுாரி அணி ஏமாற்றம்

சென்னை, டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், யூத் சென்டர் சி.சி., அணி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில், பிரசிடென்சி கல்லுாரியை தோற்கடித்தது.
டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டி, சென்னையின் பலமைதானங்களில் நடக்கின்றன. பல்வேறு டிவிஷனில் கிளப் மற்றும் அகாடமி அணிகள் மோதுகின்றன.
ஆறாவது டிவிஷனில், பிரசிடென்சி கல்லுாரி முதலில் பேட்டிங் செய்து, 29 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 106 ரன்களை அடித்தது. எதிர் அணியின் வீரர் ஹூசெபா, ஐந்து விக்கெட் எடுத்து, 25 ரன்களை கொடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த, யூத் சென்டர் சி.சி.,19.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து, 107 ரன்களை அடித்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதேபோல், ஐந்தா வது டிவிஷனில்குளோபல் சி.சி., 32.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, 126 ரன்களை அடித்தது.
எதிர் அணியான கிராண்ட் பிரிக்ஸ் சி.சி., வீரர் சாமுவேல், 'ஹாட்ரிக்' விக்கெட்டுடன் நான்கு விக்கெட் எடுத்து, 15 ரன்களை கொடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த, கிராண்ட் பிரிக்ஸ் அணி, 31.2 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 130 ரன்களை அடித்து வெற்றிபெற்றது.