காதலித்த பெண்ணை ஏமாற்றிவிட்டு திருமணம் செய்ய முயன்றவர் கைது

பொன்னேரி, பெரியபாளையம் அடுத்த தும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன், 33; மெக்கானிக்.

இவர், பொன்னேரிஅருகே உள்ளகிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் ஹிந்தி கற்க சென்றார்.

இதில், இருவருக்கும்இடையே பழக்கம்ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இந்நிலையில், லோகேஸ்வரனுக்குஅவரது பெற்றோர் வேறு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர்.

நேற்று முன்தினம்பெரியபாளையம் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற இருப்பது,லோகேஸ்வரனின்காதலிக்கு தெரிய வந்தது.

தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, வேறு பெண்ணுடன் திருமணம் செய்யும் லோகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்அளித்தார்.

புகாரின்படி விசாரித்த போலீசார், லோகேஸ் வரனை கைது செய்தனர். இதனால், லோகேஸ்வரனின் திருமணமும் நின்று போனது.

Advertisement