அபிபுல்லா மெமோரியல் அணி டிவிஷன் ஹாக்கி 'லீக்'கில் வெற்றி

சென்னை, சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் அணிகளுக்கான ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கின்றன.

வேளச்சேரி கிளப், எம்.சி.சி., - அடையாறு யங்கஸ்ட், இந்திரா காந்தி உட்பட 33 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் எட்டு குழுக்களாக பிரிந்து, 'லீக்' முறையில் வார இறுதி நாட்களில் மட்டும் மோதுகின்றன.

அந்த வகையில், நேற்று முன்தினம் நடந்த, 'லீக்' ஆட்டங்களில், சேலஞ்சர்ஸ் அணி, 4 - 1 என்ற கணக்கில், தமிழக மின் வாரிய அணியை தோற்கடித்தது.

மற்றொருபோட்டியில், மெட்ராஸ் புளூஸ் அணி, 3 - 1 என்ற கணக்கில் யூத் விங்ஸ் அணியையும், ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணி, 5 - 0 என்ற கணக்கில், கொரட்டூர் புல்மூன் அணியையும் வீழ்த்தின.

அபிபுல்லாமெமோரியல் அணி, 6 - 0 என்ற கணக்கில், அண்ணா மெமோரியல் அணியை தோற்கடித்து வெற்றிபெற்றது.

Advertisement