கணேசா ஹாலோ பிளாக்ஸ் அணைப்புதுாரில் கிளை திறப்பு

திருப்பூர், : அவிநாசி அருகே அணைப்புதுாரில் கணேசா ஹாலோபிளாக்ஸ் மூன்றாவது கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

திருப்பூர் - அவிநாசி ரோடு, அம்மாபாளையம் மற்றும் பெரியாயிபாளையத்தில் கணேசா ஹாலோ பிளாக்ஸ் செயல்படுகிறது. இதன் 3 வது புதிய கிளை, அணைப்புதுாரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய கிளையை அதன் உரிமையாளர் பரத்தின் பெற்றோர் பழனியம்மாள் - கணேசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

பரத் கூறியதாவது:

எங்கள் முதல் கிளை 2006ல், அம்மாபாளையத்திலும், 2011ல் இரண்டாவது கிளை, பெரியாயிபாளையத்திலும் தற்போது அணைப்புதுாரில் மூன்றாவது கிளையும் துவங்கியுள்ளோம். எங்கள் நிறுவனத்தில் ஹாலோ பிளாக், சாலிட் பிளாக், எம்.சாண்ட், பி.சாண்ட், ரெனாகான், ரெட் பிரிக்ஸ், பிளை ஆஷ் பிரிக்ஸ், இண்டர்லாக் பிரிக்ஸ், போரோதெர்ம் பிரிக்ஸ், ரப்பர் மோல்டு பேவர், கான்கிரீட் பேவர் உள்ளிட்டவை கிடைக்கும். ஜல்லி, ரிங்ஸ், புளு மெட்டல் தரமானதாக கிடைக்கும். விவரங்களுக்கு, 94874 81978, 94425 81978 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement