பத்திரப்பதிவு அலுவலர் வராததால் முற்றுகை
வடமதுரை: வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று மதியம் வரை அலுவலர் யாரும் பணிக்கு வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
வடமதுரை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு 14 ஆண்டுகளாக நிரந்தரமாக சார் பதிவாளர் இல்லாமல் வெவ்வேறு ஊர்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் பதவி அளவிலானவர்களே மாற்று பணியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் மேனுவல் வில்லங்க சான்று வழங்குவது ஆண்டு கணக்கில் தேக்கம், சிக்கல் மிகுந்த விஷயங்களில் சரியான முடிவு எடுக்கப்படாமல் கிடப்பில் விடப்படுவது என பிரச்னைகள் உள்ளன.
நேற்று காலை ஏராளமானோர் பத்திர அலுவலக பணிக்காக வந்த நிலையில் பதிவு அதிகாரம் பெற்ற அலுவலர் யாரும் இல்லை. அதிருப்தியான மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து விடுமுறையில் இருந்த ஒரு இளநிலை உதவியாளரை பணிக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவர் மதியம் 1:00 மணிக்கு அலுவலகம் வந்த பின் பணிகள் துவங்கியது. இங்கு நிரந்தர சார்பதிவாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ
-
தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,
-
'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி
-
பறை இசையில் பறக்கும் வேலு ஆசான்
-
2 நாள் அரசு முறை பயணமாக மொரீசியஸ் புறப்பட்டார் பிரதமர்!
-
கூடுதல் கோதுமை கேட்டு கார்டுதாரர்கள் தகராறு: அரசு காசு கொடுத்து வாங்கி வினியோகிக்குமா?