ஸ்ரீ ஜெடைய சுவாமி கோவில் குண்டம் பல்வேறு கிராம மக்கள் பங்கேற்று பிரார்த்தனை

கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள ஜக்கனாரை கிராமத்தில், ஜெடைய சுவாமி கோவில் குண்டம் திருவிழா, மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா, நேற்று தூங்கியது. குண்டம் இறங்க, பல நாட்கள் விரதம் மேற்கொண்டு பக்தர்கள் நேற்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அதிகாலை முதல், ஜெடைய லிங்க சுவாமிக்கு, சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடந்தது.

விழாவின் முக்கிய அம்சமாக, குரும்பர் பழங்குடி மக்கள், தங்களுக்கு உறித்தான வகையில், பாரம்பரிய இசை முழங்க பூஜை செய்து, கற்களை உரசி குண்டத்தில் தீ மூட்டினர்.

தொடர்ந்து, ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டதை அடுத்து, குண்டம் இறங்க தயாராக இருந்த பக்தர்கள், ஐதீக முறைப்படி, காற்று வீசியதை அடுத்து, முதலில் பூசாரி குண்டம் இறங்க, ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து குண்டம் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து, ஐயனை வழிபட்டனர்.

Advertisement