ஆட்டோ டிரைவரான டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர்: பெங்களூருக்காரருக்கு ஏற்பட்ட சோகம்

பெங்களூரு: டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் மற்றும் ஆட்டோ டிரைவர் என்கிற இரட்டை சவாரி செய்யும் பெங்களூருக்காரர் கதை சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆட்டோ டிரைவர், டேபிள் டென்னிஸ் பயிற்சியாளராகவும் இருப்பது, ஆர்வமும் உறுதியும் சவால்களை எப்படி வெல்ல முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தின் மனிதவள தலைவரான காயத்ரி கோபகுமார் என்பவர் ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த ஆட்டோவில் டேபிள் டென்னிஸ் பயிற்சி பெற தொடர்பு கொள்ளலாம் என்ற நோட்டீஸ் இருந்ததால், அது குறித்து ஆட்டோ டிரைவரிடம் கேட்டுள்ளார்.
இது குறித்து காயத்ரி கோபகுமார் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இன்று காலை, பெங்களூருவில் ஒரு தொழில்முறை ஆட்டோ ரிக்ஷா டிரைவரான குருமூர்த்தியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அதுமட்டுமல்ல,அவரும் ஒரு டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர்.பெங்களூருவின் மல்லேஸ்வரத்தைச் சேர்ந்தவர்.
குருமூர்த்தி கர்நாடக மாநில அணிக்கு முழுநேர பயிற்சியாளராக இருந்தார், ஆனால் கோவிட் காலத்தில் அவரது பயிற்சி வாழ்க்கையை சீர்குலைத்த பிறகு ஆட்டோ ஓட்டுவதை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
அவர் காட்டிய தொழில்முறை, பொறுமை மற்றும் மரியாதை என்னை பிரமிக்க வைத்தது. பன்முகத் திறமைகளால் நம்மை ஊக்குவிக்கும் நபர்களைக் கொண்டாடுவோம். எதிர்பாராத இடங்களிலும் ஆர்வமும் விடாமுயற்சியும் செழித்து வளரட்டும் எனக்கூறியதுடன் அவரது படங்களையும் பதிவிட்டார். அது சமூகவலைதளத்தில் வைரல் ஆகி உள்ளது.

மேலும்
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் அதிகரிக்கும் என கணிப்பு
-
பாக்.,கிற்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் 24 மணி நேரம் கெடு
-
உரிமைகளை பறிப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
பாடவாரியான உலக தரவரிசை பட்டியல்: முதல் 50ல் இடம் பிடித்த 9 இந்திய பல்கலைகள்
-
சமகல்வி என்பது நமது உரிமை: அண்ணாமலை
-
புதுக்கோட்டைக்கு கிடைத்த கவுரவம்: ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை அமைப்பு