'எனக்கு 8 மொழிகள் தெரியும்'... மும்மொழி கொள்கைக்கு எம்.பி., சுதா மூர்த்தி ஆதரவு

புதுடில்லி: மும்மொழி கொள்கை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ராஜ்யசபா எம்.பி.,யும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள், மும்மொழி கல்வி உள்ளிட்ட சில அம்சங்களை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
அண்மையில், தி.மு.க., எம்.பி.,களுக்கும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் பார்லிமென்டில் பெரும் விவாதமே நடந்தது.
இந்த நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு கர்நாடகாவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சுதா மூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- புதிய தேசிய கல்விக்கொள்கையானது, மாணவர்களை பல மொழிகளை கற்க ஊக்குவிக்கிறது. ஒருவர் பல மொழிகளை கற்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உள்ளது. எனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும். எனவே, நான் மகிழ்ச்சியோடு கற்கின்றேன். குழந்தைகளும் நிறைய கற்றுக் கொள்ள முடியும், இவ்வாறு அவர் கூறினார்.





மேலும்
-
முதல்வர் மம்தா தாண்டியா நடனம்: வீடியோ வைரல்
-
குல்தீப் 'நம்பர்-3': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
-
உலக டெஸ்ட்: ரூ. 45 கோடி இழப்பு: பைனலுக்கான டிக்கெட் விற்பனையில்
-
இந்தியாவுக்கு 4 பதக்கம்: உலக குளிர்கால விளையாட்டில்
-
பெங்களூரு வெளியேறியது ஏன்: கேப்டன் மந்தனா விளக்கம்
-
கேரள முதல்வர் பினராயுடன் செல்பி : மேலும் மேலும் காங்கிரசை கடுப்பேற்றும் சசிதரூர்