சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது

12

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 20 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.

டில்லி அரசியலில் வங்கதேசத்தவர் சட்டவிரோத குடியேற்றம் ஒரு சூடான விஷயமாக உள்ளது. போலீசாரும் ஆங்காங்கே ரெய்டு நடத்தி அவர்களை கைது செய்து வருகின்றனர். டில்லியில் பி.வி.சி., மார்க்கெட், சுல்தான் பூரி, ஹனுமான் மந்திர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக ஆவணங்களை தயாரித்து, நாட்டிற்குள் நுழைந்து வசித்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement