புதுச்சேரியில் இனி மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2500... பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்

புதுச்சேரி; புதுச்சேரியில் பெண்களுக்கு இனி மாதம்தோறும் ரூ.2500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
@1brபுதுச்சேரியில் கடந்த மார்ச் 10ம் தேதி துணைநிலை கவர்னர் கைலாஷ்நாத் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந் நிலையில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான ரூ, 13,600 கோடி மதிப்பிலான பட்ஜெட்யை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் இன்று (மார்ச் 12) தாக்கல் செய்தார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;
*மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. இனி இந்த தொகை ரூ.2500 ஆக வழங்கப்படும்.
*மழைக்கால நிவாரணமாக விவசாய தொழிலாளர்களக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்.
*வாரம் 3 நாட்கள் தரப்பட்டு வந்த முட்டை, இனி வாரம் முழுவதும் தரப்படும்.
*அரசு., அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
*குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன் இலவச முட்டையும் வழங்கப்படும்.
*6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்விக்காக கல்லூரியில் படிக்கும் போது ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
*முதியோர் உதவித்தொகை பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் ஈமச்சடங்கு தொகை ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சமகல்வி என்பது நமது உரிமை: அண்ணாமலை
-
புதுக்கோட்டைக்கு கிடைத்த கவுரவம்: ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை அமைப்பு
-
மதத்தை வைத்து என்னுடன் விளையாடாதீர்கள்: பா.ஜ.,வுக்கு மம்தா பதிலடி
-
'எனக்கு 8 மொழிகள் தெரியும்'... மும்மொழி கொள்கைக்கு எம்.பி., சுதா மூர்த்தி ஆதரவு
-
தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்
-
ஹரியானாவில் தொடரும் பா.ஜ.,வின் அலை; 10 மேயருக்கான தேர்தலில் 9ல் வெற்றி
Advertisement
Advertisement