பாக்.,கிற்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் 24 மணி நேரம் கெடு

15

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசுக்கு இன்னும் 24 மணிநேரம் மட்டுமே அவகாசம் உள்ளது. சிறையில் உள்ள எங்களது அமைப்பை சேர்ந்தவர்களை விடுவிக்காவிட்டால் ரயிலை வெடிக்கச்செய்வோம் என்று கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


நேற்று பாகிஸ்தானின் குடாலர் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகிலுள்ள மஷ்காப் சுரங்கப்பாதை வழியாக ஒன்பது பெட்டிகளில் 425 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் மீது பலூன் விடுதலை ராணுவம் என்ற அமைப்பை சேர்ந்த போராளி குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சிறைப்பிடித்தனர். இதில் 155 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பெட்டிகளில் உள்ள 250 பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள சில பயணிகளை மனித வெடிகுண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் வைத்துள்ளதாக தகவலால் ராணுவத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், 48 நேரத்திற்குள் பாகிஸ்தான் சிறையில் உள்ள அவர்களது அமைப்பை சேர்ந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், நிறைவேற்ற தவறினால் ரயிலை வெடிக்கச்செய்வோம். என்று கிளர்ச்சியாளர்கள் கெடு விதித்துள்ளதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கெடு:

"இப்போது, ​​ஒரு நாள் கடந்துவிட்டது, பாகிஸ்தான் அரசுக்கு இன்னும் 24 மணிநேரம் மட்டுமே உள்ளது. கொடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கைக்குள் கைதிகள் பரிமாற்றத்தில் முன்னேற்றம் இல்லை என்றால், அனைத்து பணயக்கைதிகளும் பலுச் தேசிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அங்கு, அவர்கள் அரசு அட்டூழியங்கள், காலனித்துவ ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை, சுரண்டல் மற்றும் பலுசிஸ்தானில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரிக்கப்படுவார்கள்,"
இவ்வாறு கிளர்ச்சியாளர்கள் கெடு விதித்துள்ளனர்.

Advertisement