இந்தியாவுக்கு 4 பதக்கம்: உலக குளிர்கால விளையாட்டில்

டுரின்: ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம் உட்பட 4 பதக்கம் கிடைத்தன.
இத்தாலியில், ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. இதில் 102 நாடுகளை சேர்ந்த, சுமார் 1500 அறிவுசார் குறைபாடு உள்ள வீரர், வீராங்கனைகள், 8 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 30 விளையாட்டு நட்சத்திரங்கள், 19 பயிற்சியாளர் குழுவினர் என, 49 பேர் சென்றுள்ளனர்.
இதன் 'ஸ்னோபோர்டிங்' விளையாட்டுக்கான 'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்-எப்13' பிரிவு பைனலில் இந்திய வீரர் சமீர் யாதவ், தங்கம் வென்றார்.
'ஸ்னோ போர்டிங்' விளையாட்டுக்கான 'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்-எப்14' பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை பாரதி, இந்திய வீரர் ஹேம் சந்த், முறையே முதலிரண்டு இடம் பிடித்து தங்கம், வெள்ளி வென்றனர்.
'ஸ்னோ போர்டிங்' விளையாட்டுக்கான 'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்-எப்16' பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை ஹர்ஷிதா தாகூர் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெள்ளி என, 4 பதக்கம் கிடைத்தன.