'லேப்டாப்' திருடன் கைது


'லேப்டாப்' திருடன் கைது


ஆட்டையாம்பட்டி:சீரகாபாடியில் உள்ள தனியார் கல்லுாரியில் ஹோமியோபதி படிக்கும் மாணவர் அரவிந்த், 22. இவர் நேற்று முன்தினம், 'லேப்டாப்' பயன்படுத்தி விட்டு இரவு, 9:30 மணிக்கு துாங்கச்சென்றார். நேற்று காலை, 8:00 மணிக்கு பார்த்தபோது லேப்டாப்பை காணவில்லை. அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் போலீசார், காலை, 11:00 மணிக்கு ரோந்து சென்றபோது, இனாம் பைரோஜி அருகே நைனாம்பட்டி சாலையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டியை சேர்ந்த பெரியசாமி, 36 என்பதும், அரவிந்த் லேப்டாப்பை திருடியதும் தெரிந்தது. இதனால் பெரியசாமியை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement