அரசு ஊழியர்கள் சங்கம்சார்பில் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் சங்கம்சார்பில் ஆர்ப்பாட்டம்


கரூர்:தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், காப்பீட்டு திட்டத்தில் கட்டணம் இல்லாத சிகிச்சை மற்றும் காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்கும் முன், அரசு ஊழியர்களின் விருப்பத்தை கோர வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் சிங்கராயர், மாவட்ட பொருளாளர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement