திட்டப்பணி துவக்கிவைப்பு


திட்டப்பணி துவக்கிவைப்பு

ஓமலுார்:ஓமலுார் சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், பெரியேரிபட்டி ஊராட்சி கந்தசாமிவட்டம், முத்துநாயக்கன்பட்டி மற்றும் வட்டகாடு பகுதிகளில் தலா, 10,000 லிட்டரில், 3 மேல்நிலை நீர் தேக்க தொட்டி, முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சமையல் கூடம், அதே ஊராட்சியில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைத்தல் உள்பட, 67 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகளை, அந்தந்த பகுதியில், ஓமலுார் எம்.எல்.ஏ., மணி பூமி பூஜை செய்து, நேற்று துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், ஜெ., பேரவை மாநில துணை செயலர் விக்னேஷ், ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், விமல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.-

Advertisement