முதல்வர் மம்தா தாண்டியா நடனம்: வீடியோ வைரல்

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோல்கட்டா குழுவினருடன் சேர்ந்து தாண்டியா நடனம் ஆடிய ஒரு சுவாரஸ்யமான வீடியோ வைரலாகி வருகிறது.

மார்ச் 14ம் தேதி அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா மாநகராட்சி ஹோலி உத்சவ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் பங்குபெற்ற கலைஞர்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு தாண்டியா நடனம் ஆடினார். மம்தாவின் நடனம், பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கலைஞர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா நடனமாடியதால், இந்த நிகழ்ச்சியின் வீடியோ வைரலாகி வருகிறது.

இணையத்தில் இந்த வீடியோ பல சுவாரஸ்யமான கருத்துகளைப் பெற்றுள்ளது.

Advertisement