'வரும் 31க்குள் வரி செலுத்துங்கள்'தவறினால் குடிநீர் 'கட்'; கலெக்டர்
'வரும் 31க்குள் வரி செலுத்துங்கள்'தவறினால் குடிநீர் 'கட்'; கலெக்டர்
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்.,களிலும் நிலுவை மற்றும் நடப்பாண்டு வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிம கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைத்து பொதுமக்களும் வரும், 31க்குள் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிம கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பஞ்., அலுவலகத்தில் அல்லது வரி வசூல் முகாம்கள், பஞ்., களப்பணியாளர்களிடம், 'பி.ஓ.எஸ்., மெஷின்' மூலமும், வீட்டு வரி இணைய தளம், https://vptax.tnrd.gov.in என்ற VP Tax Online Portal மூலம், ஜிபே, போன்பே, பேடிஎம், பற்று அட்டை, கடன் அட்டை என எவ்வகையிலும் வரியை செலுத்தி, ரசீது பெறலாம்.
முறையாக வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை, தண்ணீர் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா
எச்சரித்துள்ளார்.