அத்தி வாராஹி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், வேலாத்தம்மன் கோவில் தெருவில், புதிதாக அத்தி வாராஹி கோவில் கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை துவங்கியது.
நேற்று, காலை 6:30 மணக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடும், 10:15 மணிக்கு, அருள்சித்தர் அகஸ்திய அன்புசெல்வன் முன்னிலையில், வேத விற்பன்னர்கள், கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் :ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்நது வாராஹி மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1.70 கோடியில் மேம்பாடு
-
புதுச்சேரி பட்ஜெட் அறிவிப்புகள்
-
கவர்னர் மாளிகை புதுப்பிக்க ரூ.10 கோடி அரசு ஒதுக்கீடு
-
ரூ.5.22 கோடியில் குளங்கள் சீரமைப்பு
-
முதல்வர் திறன் மேம்பாட்டு திட்டம் 30 ஆயிரம் இளைஞர் பயன்பெறுவர்
-
பட்ஜெட்டில் காரைக்கால் புறக்கணிப்பு பி.ஆர்.,சிவா எம்.எல்.ஏ., வெளிநடப்பு
Advertisement
Advertisement