சுவாமி ஆடியதில் தகராறு
பரங்கிப்பேட்டை : திருவிழாவில் சுவாமி ஆடியதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகன் சத்தியகிருஷ்ணன், 21; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கருக்கும், கடந்த 8 ம் தேதி சந்தைக்கடை தெரு கோவில் திருவிழாவில் பெண்கள் சாமி ஆடியது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். அதில், சத்தியகிருஷ்ணன் தாய் ராஜேஸ்வரி மற்றும் சங்கர் மனைவி தமிழ்ச்செல்வி காயமடைந்தனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சத்தியகிருஷ்ணன், சீனிவாசன், 44; சத்தியரஞ்சினி, சத்தியபாண்டியன், சங்கர், சஞ்சய், சச்சின், தமிழ்செல்வி ஆகிய 8 பேர் மீது பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சத்தியகிருஷ்ணன், சீனிவாசனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எஸ்.கொடிக்குளத்தில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி
-
கண்மாயில் கருவேல மரங்கள், மடை சேதம் சிக்கலில் ஆனையூர் கண்மாய்
-
தொடருது..: மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்: குடும்ப தகராறு காரணமாக இருப்பது அதிகரிப்பு
-
வெயில் தாக்கத்தை குறைத்த திடீர் மழை
-
இன்று முதல் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்
-
திருச்செந்துாரில் தேரோட்டம் மாசி திருவிழா கோலாகலம்
Advertisement
Advertisement