நட்பிற்கு என்ன காரணம்?

இயற்கையில் ஒவ்வோர் உயிரும் மற்றோர் உயிரைச் சார்ந்து தான் வாழ்கிறது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். விலங்குகள், தாவரங்கள் ஏதேனும் ஒரு வகையில் தங்களுக்குள் உதவிக் கொள்கின்றன. இதேபோல இரண்டு வெவ்வேறு விலங்குகள் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குள் உதவிக் கொள்ளும்.
சமீபத்தில் வரிக்குதிரைகள் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு இடையே இப்படியான நட்பு இருப்பது முதன்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள புல்வெளிகளில் வாழும் வரிக்குதிரைகள் இடையே ஓர் ஆய்வை உயிரியலாளர்கள் மேற்கொண்டார்கள். ஆறு வரிக்குதிரைகளின் கழுத்துகளில் வீடியோ கேமராவைக் கட்டி வைத்தார்கள். இதன்மூலம் அவை எங்கெல்லாம் செல்கின்றன, எந்த விலங்குகளுடன் எல்லாம் ஒருங்கிணைந்து வாழ்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.
காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகளுடன் இணைந்து வரிக்குதிரைகள் புல் மேய்வது, தண்ணீர் குடிப்பதுமாக இருந்தது தெரிய வந்தது.
ஆனால் இவற்றை விட அதிகமான நேரத்தை ஒட்டகச் சிவிங்கிகளுடன் தான் வரிக்குதிரைகள் செலவிட்டுள்ளன.
ஏன் இந்த இரண்டு விலங்குகளுக்கு இடையே மட்டும் இப்படியான நெருக்கம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அப்போதுதான் இந்த விஷயம் தெரிய வந்தது. அதாவது ஒட்டகச்சிவிங்கிகள் உயரமாக இருப்பதால் துாரத்தில் வரும் ஆபத்தை முதலிலேயே கண்டு உணர்ந்து எச்சரித்து விடுகின்றன.
அதேபோல் வரிக்குதிரைகள் பொதுவாகக் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிவதால் எதிரி விலங்குகள் அவ்வளவு சுலபமாகத் தாக்க முற்படுவதில்லை.
இதனால் இவற்றுடன் சேர்ந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கிகளும் பாதுகாப்பு பெறுகின்றன. இந்த வகையில் இரண்டு விலங்குகளும் ஒன்றுக்கொன்று உதவி வாழ்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
-
மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை
-
மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!
-
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!
-
சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா; மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா!
-
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!