துணியிலிருந்து காகிதமா?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று காகிதம். காகித உற்பத்திக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. இதற்கு மாற்றாகக் கரும்புச் சக்கை உள்ளிட்ட கழிவுப் பொருட்களிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது.
மற்றொரு பக்கம் பயன்படுத்தப்பட்ட உடைகள் மறுசுழற்சி செய்யப்படாமல் பெரும்பாலும் நிலத்தில் புதைக்கப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இப்படி வீணாக்கப்படுகின்ற துணிகளில் இருந்து பேப்பர் தயாரிக்கும் முறையை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிரேஸ் தொழில்நுட்ப பல்கலை கண்டறிந்துள்ளது.
முதலில், பருத்தித் துணிகள் சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன. பிறகு சில வேதிப்பொருட்கள் இவற்றுடன் கலக்கப்படுகின்றன. இதனால் துணியிலிருந்து பருத்தி இழைகள் தனியாகப் பிரிகின்றன. பிரியும் பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து முடிச்சு விழுந்து விடாதபடி தனியாகச் சேகரிக்கப்படுகின்றன.
இவ்வாறு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதும் இவற்றை நேரடியாகக் காகித உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும். இந்த காகிதங்கள் எழுதுவதற்குப் பயன்படுபவை அல்ல. மாறாகப் பொட்டலம் கட்டுவதற்கு (பேக்கேஜிங்) பயனுள்ளவையாக இருக்கும்.
இந்த வகையான காகிதங்கள் நல்ல அடர்த்தியானவை, எளிதில் கிழியாது. எனவே, பேக்கேஜிங்கில் உபயோகமாகும் அட்டைப் பெட்டிகள் செய்யவும் பயன்படுத்த முடியும். இந்த செயல்முறை வருங்காலத்தில் இன்னும் மேம்படுத்தப்படும். அப்போது வீணாகக் கொட்டப்படும் துணிக்கழிவுகள் முழுவதும் காகிதங்களாக மாற்றப்படும்.
துணிகளில் உள்ள இழைகள் ஒட்டாமல் கிடைப்பதற்கு சில நொதிகள் உதவும். அவற்றைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
-
மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை
-
மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!
-
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!
-
சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா; மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா!
-
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!