பள்ளி வேன் கவிழ்ந்து 17 குழந்தைகள் காயம்
பள்ளி வேன் கவிழ்ந்து 17 குழந்தைகள் காயம்
பெத்தநாயக்கன்பாளையம்:தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 17 குழந்தைகள் காயமடைந்தனர். ஒரு குழந்தை மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம், பகுடுப்பட்டில் தனியார் பள்ளி உள்ளது. அப்பள்ளி வேன், சூலாங்குறிச்சியில், 22 குழந்தைகளை அழைத்துக்கொண்டு பள்ளி நோக்கி, நேற்று காலை, 9:30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. கருமந்துறையை சேர்ந்த டிரைவர் செல்வம், 51, ஓட்டினார்.
அத்திரிப்பட்டி அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், பள்ளி குழந்தைகள், 17 பேர் காயமடைந்தனர். அவர்களை, மக்கள் மீட்டு கருமந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அதில் ரித்திக், 4, என்ற குழந்தை படுகாயம் அடைந்ததால், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற குழந்தைகள், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
டிரைவர் செல்வம் காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருமந்துறை போலீசார், வேனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிப்படுத்தி விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'வேன் முன்புற டயர் ராடு கட்டாகி விபத்து ஏற்பட்டது' என்றனர்.
மேலும்
-
பொன்மாணிக்கவேல் மீது வழக்கு : சி.பி.ஐ.,மீது கோர்ட் அதிருப்தி
-
தேஜஸ் போர் விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல்; ஒடிசா கடற்கரையில் சோதனை வெற்றி
-
ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை; பொள்ளாச்சி கல்லுாரி மாணவி சோக முடிவு
-
சத்குரு வீடியோவை நீக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு
-
கோவை மக்களை வஞ்சிக்கும் தி.மு.க., அரசு! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
-
ரயில் தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்; இருவரை கைது செய்த ரயில்வே போலீசார்