மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் இந்திய கம்யூ., முத்தரசன் வலியுறுத்தல்
விருதுநகர்:தமிழக எம்.பி.,க்களை தவறாக பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என விருதுநகரில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கோரினார்.
இவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒருவர் விரும்பினால் மும்மொழி அல்ல, முப்பதாயிரம் மொழிகளை கூட கற்றுக்கொள்ளலாம். மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் முதலில் சமஸ்கிருதம், அடுத்ததாக ஹிந்தி உள்ளது.
தமிழக அரசு முதலில் ஒப்புக்கொண்டு, தற்போது மாற்றி பேசுவதாக லோக்சபாவில் பொய்யான கருத்தை தெரிவிக்கின்றனர். இதற்காக தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்.
மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி., தொகுதி மறுவரையறை என்றால் தமிழக எம்.பி.,க்களின் எண்ணிக்கை 31 ஆக குறையும். மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிலும், இயற்கை பேரிடர்களின் போது தமிழகத்திற்கு தேவையான நிதி வழங்கப்படுவதில்லை. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ. 1635 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை.
தமிழகத்தின் கனிமவளங்களை பாதுகாக்க வேண்டும். இதில் யாரும் கொள்ளையில் ஈடுபட அனுமதி அளிக்கக்கூடாது, என்றார்.
மேலும்
-
சிந்தனையாளர் முத்துக்கள்!
-
பொன்மாணிக்கவேல் மீது வழக்கு : சி.பி.ஐ.,மீது கோர்ட் அதிருப்தி
-
தேஜஸ் போர் விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல்; ஒடிசா கடற்கரையில் சோதனை வெற்றி
-
ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை; பொள்ளாச்சி கல்லுாரி மாணவி சோக முடிவு
-
சத்குரு வீடியோவை நீக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு
-
கோவை மக்களை வஞ்சிக்கும் தி.மு.க., அரசு! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு