காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பேட்டை மாரியம்மன்

காங்கயம்; காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பேட்டை மாரியம்மன் கோவிலில், 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் பொங்கல் திருவிழா துவங்கியது. தினமும், சுவாமி திருவீதி உலா, சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்டவை நடந்து வந்தது.

நேற்று பக்தர்கள் பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு பூஜைகள் நடந்தது. காலை, 10:00 மணியளவில் பழையகோட்டை ரோட்டில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் குளக்கரையில் இருந்து பூவோடு எடுத்து வந்துமாரியம்மனுக்கு செலுத்தப்பட்டது. பக்தர்கள் அலகு குத்தியும், பூவோடு எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Advertisement