தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.8,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. வார துவக்க நாளான, மார்ச் 10ம் தேதி, திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400க்கும், ஒரு கிராம் ரூ.8,050க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மார்ச் 11ம் தேதி செவ்வாய் கிழை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,160க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (மார்ச் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (மார்ச் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.8,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த நாளில், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சவரன் தங்கம் மீண்டும் ரூ.65 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.


மேலும்
-
தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்
-
மதம் மாற வற்புறுத்திய அப்ரிடி; பாக்., முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பகீர்
-
தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
-
அவிநாசியில் விவசாய தம்பதி கொலை; அண்ணாமலை கண்டனம்
-
யூடியூப் பார்த்து தங்கத்தை மறைக்கக் கற்றேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்
-
மத்திய பிரதேசத்தில் சோகம்! நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மோதி 7 பேர் பரிதாப பலி