திருப்பூர் பத்மாவதி புரம் ஸ்ரீ மாகாளியம்மன்

திருப்பூர்; திருப்பூர், பத்மாவதிபுரம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா, 9ம் தேதி பூச்சாட்டு, பொரி மாற்றுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, நேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.

தொடர்ந்து பொங்கல் வைத்தல், கும்பம் கொண்டு விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று மஞ்சள் நீராட்டு, சிறப்பு அபிஷேகபூஜை மற்றும் தீபாராதனை ஆகியவையுடன்பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

Advertisement