குப்பையை திருப்பி அனுப்பிய மக்கள்

பல்லடம்; கோடங்கிபாளையம் ஊராட்சி பகுதிகளில், அடிக்கடி குப்பைகள் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது.

கோழி இறைச்சி கழிவுகள், அழுகிய முட்டைகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்படுவதால், துர்நாற்றத்துடன், நோய் தொற்று பாதிப்பும் ஏற்படுகிறது.

நேற்று முன்தினம், கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காரணம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், வாகனம் ஒன்றில் இருந்து குப்பைகள், கழிவுகள் பொது இடத்தில் கொட்டப்பட்டு வந்தன. இப்பகுதி பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். விசாரித்ததில், அது, கருமத்தம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான வாகனம் என்பதும், குப்பைகள், கழிவுகளை கொட்டியதும் தெரிந்தது. குப்பைகளை உடனடியாக எடுத்துச் செல்லுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியதால், குப்பைகள் கழிவுகள் மீண்டும் அதே வாகனத்தில் ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டது.

Advertisement