காட்டு மாடு தாக்கி வனக்காப்பாளர் பலி

பெ.நா.பாளையம்; காட்டு மாடு தாக்கி வனக்காப்பாளர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட தோலம் பாளையம் பகுதியில் கடந்த, 10ம் தேதி குடியிருப்பு பகுதி அருகே சுற்றிக் கொண்டிருந்த காட்டு மாட்டை பெரியநாயக்கன்பாளையம் வன காப்பாளர் அசோக் குமார்,45, விரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு மாடு தாக்கியதில் வயிற்றுப் பகுதியில் அசோக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சீலியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும், அதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று காலை, 9:00 மணிக்கு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement