தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

ஹைதராபாத்: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, டில்லியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தமிழக அரசு குழு சந்தித்து மார்ச் 22ல் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.
லோக்சபா தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு குறைவு உள்ளிட்ட விவகாரங்களை தேசிய அளவில் எடுத்து செல்வதற்கு, தென் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை இணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பிற மாநில முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைக்க, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டில்லியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தமிழக அரசு குழு சந்தித்து மார்ச் 22ல் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.
அமைச்சர் நேரு, தி.மு.க., எம்.பி., கனிமொழி ஆகியோர் அழைப்பு விடுத்தனர். கட்சி மேலிட அனுமதி பெற்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பேன் என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
பங்கேற்பேன்
பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது. கட்சி மேலிட அனுமதி பெற்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பேன். தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது.
வாழ்த்துகள்
முக்கியமான விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக அரசுக்கு வாழ்த்துகள். எந்த காரணத்தை கொண்டும் தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில், பா.ஜ., தென் மாநிலங்களுக்கு எதிராக சதி செய்கிறது. இந்தியாவுக்கு அதிகமான வரி வருவாயை தென் மாநிலங்கள் வழங்கி வருகின்றன.
அதிக வரி
வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் அதிக வரியை செலுத்துகின்றன. தென் மாநிலங்களில் பா.ஜ.,வை வளர அனுமதிக்காததால், இத்தகைய முயற்சியை பா.ஜ., மேற்கொண்டுள்ளது. நடக்க போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல. இது தென் இந்தியாவின் தொகுதிகளைக் குறைக்கும் நடவடிக்கை ஆகும். இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.



மேலும்
-
உ.பி.,யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள்: முதல்வர் ஆதித்யநாத் பெருமிதம்
-
பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம்: முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
-
வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள்; இது மைல்கல் என இஸ்ரோ பெருமிதம்
-
வீரவசனம் பேசினால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது; இ.பி.எஸ்., பாய்ச்சல்
-
எம்.பி., பதவிக்கு சிபாரிசு பண்ணுங்க; செய்தியாளர்களிடம் கேட்கிறார் ராமதாஸ்
-
தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்