எம்.பி., பதவிக்கு சிபாரிசு பண்ணுங்க; செய்தியாளர்களிடம் கேட்கிறார் ராமதாஸ்

6

விழுப்புரம்: 'எம்.பி., பதவிக்கு சிபாரிசு பண்ணுங்க' என பேட்டிக்கு வந்த செய்தியாளர்களிடம் ஜாலி கோரிக்கை வைத்தார் பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் டாக்டர் ராமதாஸ். அப்போது செய்தியாளர் ஒருவர், 'ராஜ்யசபா எம்.பி., சீட் காலியாகிறதே... பா.ம.க., ஏதாவது கோரிக்கை வைத்துள்ளதா' என கேள்வி எழுப்பினார். இதற்கு, 'வைக்கலாம் போல் இருக்கிறதே. நீங்கள் கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்க' என சிரித்தபடி தெரிவித்தார் ராமதாஸ்.



இதற்கு செய்தியாளர், 'யாரிடம் சிபாரிசு செய்ய வேண்டும்' என கேட்டதற்கு, 'ரகசியமாக சொல்கிறேன். ஆனால், தி.மு.க.,விடம் கேட்க மாட்டோம்' என்றார் ராமதாஸ்.

மேலும் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் அளித்த பேட்டி: தமிழர்களின் தொன்மை கால நாகரிகம் தொடர்பான புத்தகத்தை அவருக்கு (தர்மேந்திர பிரதான்) கொடுக்க வேண்டும். அந்த புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது. அதனை படித்த பிறகு நான் சொன்னது தவறு என்று அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்களுக்கு பாராட்டுகள்.



தமிழகத்தில் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,450 கொள்முதல் விலை வழங்க வேண்டும். மகளிர் உரிமை தொகையை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement