இளையராஜாவுக்கு பாராட்டு விழா
சென்னை:இசை அமைப்பாளர் இளையராஜாவின் அரை நுாற்றாண்டு கால திரையிசைப் பயணத்தை, அரசு சார்பில் கொண்டாட முடிவெடுத்து உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
லண்டனில் இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்து, சென்னை திரும்பியபோது, தமிழக அரசு சார்பில், அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இளையராஜா நேற்று இரவு முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளித்ததற்காக நன்றி தெரிவித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு உடனிருந்தார்.
சந்திப்புக்கு பின் முதல்வர் வெளியிட்ட அறிக்கை:
சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இளையராஜாவின் அரை நுாற்றாண்டு கால திரையிசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்
-
தமிழக அரசின் வரம்புக்குள் தான் கடன் இருக்கிறது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்
-
பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை; மளிகை பொருட்கள் வாங்க சென்றபோது கொடூரம்
-
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
-
முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து
-
மேஜிக் செய்வதற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் என்ன?
-
ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!