முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து

சென்னை; முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
பல்வேறு ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறான பேச்சுகள் பேசியதாக அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சி.வி. சண்முகம் மீது பல வழக்குகள் பதிவாகின. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் தரப்பில், எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளும்கட்சியை விமர்சிக்க உரிமை உள்ளதாக வாதிடப்பட்டது. அரசியல் பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மனுதாரரின் வாதத்திற்கு காவல்துறை தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கோர்ட் பலமுறை எச்சரித்தும், விமர்சனம் என்ற பெயரில் தொடர்ந்து அவர் இதுபோல் பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாஜி சட்ட அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேசவேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி இளந்திரையன், எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சிக்கலாம், ஆனால் உருவகேலி செய்யக்கூடாது என்றார்.
பொதுவெளியில் பேசும் போது வரைமுறையுடன் பேச வேண்டும் என்ற அவர், சி.வி. சண்முகம் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக கூறினார். எதிர்காலங்களில் அவர் இதுபோன்று பேசாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும்
-
குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் திடீர் தீ; 3 பேர் கருகி பலி
-
சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை
-
இ.பி.எஸ்., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட்!
-
15 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு
-
கைதிகள் தயாரிப்பு பொருட்களில் போலி 'பில்' மோசடி; பெண் எஸ்.பி., உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்
-
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்கம் விலை: சவரன் ரூ.66,400 ஆக விற்பனை!