நாக்கை அறுத்து விடுவான்.. ஜாக்கிரதை: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வேலூர் : ''தமிழனை நாகரிகம் இல்லாதவன் என்று சொன்னால், நாக்கை அறுத்து விடுவான் ஜாக்கிரதை,'' என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மத்திய அரசை கண்டித்து தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் பங்கேற்று, அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஒரு மாட்டுக்கு நோய் வந்தது; உடம்பெல்லாம் சீழ் வடிந்தது. அந்த மாடுகிட்ட யாரும் போக முடியாத அளவுக்கு நாற்றம் அடித்தது. அந்த மாட்டை ஒரு இடத்தில் ஒருவன் கட்டினான். பின், அந்த மாட்டை யாராவது தொட்டுட்டு வந்தா, 1,000 ரூபாய் கொடுக்கிறேன்னு சொன்னான். ஒருத்தன் மாட்டைத் தொட வேகமாக ஓடினான். போன வேகத்தில் நாற்றம் பொறுக்க முடியாமல் திரும்பி வந்தான்.
அடுத்து இன்னொருத்தன் போனான். குடல் வெளியே வந்துடும் போலன்னு சொல்லி, திரும்பி விட்டான். இப்படி போய் திரும்பியவன் தமிழ்நாட்டுக்காரன். ஆனால், வட நாட்டுக்காரன் ஒருவன் மாட்டைத் தொடப் போக, மாடு கயிறை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.
காரணம், அவனோட நாற்றத்தை மாடால் தாங்க முடியலை. அப்படி நாற்றம் அடிப்பவன் தான் வட நாட்டுக்காரன். அவன் சொல்றான் நம்மைப் பார்த்து நாகரிகமற்றவன்னு... இப்படியெல்லாம் சொல்லப்படுற தமிழன் தான் உலகம் முழுதும் பல நாடுகளை ஆண்டிருக்கிறான்.
தமிழன் பற்றி இன்னொன்றும் சொல்றேன். தமிழன் ஒருத்தியோட மட்டும் வாழ்பவன். வட நாட்டுக்காரன் அப்படியல்ல. பத்து பேரு சேர்ந்து ஒருத்தியை கல்யாணம் பண்ணிப்பான். இதுதான் அவனோட நாகரிகம். 5 -10 பேரு சேர்ந்து, ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கலாம். இது தான் வட இந்தியாவோட சட்டம். இப்படிப்பட்ட நாகரிகத்துக்கு சொந்தக்காரன் தான், தமிழனைப் பார்த்து நாகரிகமற்றவன்னு சொல்றான். நாக்கை அறுத்துடுவான் தமிழன்.
அமைச்சரே ஜாக்கிரதையா இருக்கணும். நாவடக்கம் தேவைன்னு எங்க தலைவர் சொல்லி இருக்காரு. அதனால அமைதியா இருக்கோம். ஆனா, மத்திய அமைச்சருக்கு அதெல்லாம் தெரியலை. நாவடக்கமின்றி பேசுகிறார். அண்ணாதுரை மெல்ல அடிப்பார்; எனக்கு உரசி பார்த்து பழக்கம் இல்லை, ஒதுங்கி போய்தான் பழக்கம். எச்சரிப்பது கருணாநிதியின் பழக்கம். நாக்கை அறுத்து விடுவேன் என்பது ஸ்டாலின் பழக்கம். இந்த விஷயமெல்லாம் மத்திய கல்வி அமைச்சருக்கு தெரியாது.
அதனால், அவர் முதலில் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின், தமிழர்கள், தமிழக எம்.பி.,க்கள் குறித்து பேச வேண்டும். இனியும் அப்படியே பேசிக் கொண்டிருந்தால், அவர் சங்கடங்களை சுமக்க வேண்டும்.
ராஜாஜி கொண்டு வந்த ஹிந்தியையும், குலக் கல்வியையும் எதிர்த்து அண்ணாதுரையும், ஈ.வெ.ரா.,வும் இணைந்து போராடினர். இப்போது ஸ்டாலின், மத்திய அரசை எதிர்த்து மும்முனை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.










மேலும்
-
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்கம் விலை: சவரன் ரூ.66,400 ஆக விற்பனை!
-
தமிழக அரசின் வரம்புக்குள் தான் கடன் இருக்கிறது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்
-
பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை; மளிகை பொருட்கள் வாங்க சென்றபோது கொடூரம்
-
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
-
முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து
-
மேஜிக் செய்வதற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் என்ன?