புத்தக திருவிழா அரங்குகள் பந்தக் கால் நடும் நிகழ்ச்சி

கடலுார்: கடலுாரில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரங்குகள் அமைப்பதற்கான கால் கோல் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பந்தல் கால் நட்டு வைத்து அரங்குகள் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கமிஷனர் அனு, கூடுதல் கலெக்டர் சரண்யா முன்னிலை வகித்தனர். கடலுாரில் புத்தக திருவிழா வரும் 22ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. 100 புத்தக அரங்குகள் அமைக்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு, பாரம்பரிய உணவு அரங்கம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஆர்.டி.ஓ., அபிநயா, மாவட்ட நுாலக அலுவலர் முருகன், பி.ஆர்.ஓ., நாகராஜபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தமிழக அரசின் வரம்புக்குள் தான் கடன் இருக்கிறது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்
-
பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை; மளிகை பொருட்கள் வாங்க சென்றபோது கொடூரம்
-
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
-
முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து
-
மேஜிக் செய்வதற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் என்ன?
-
ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!