அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்ம் 

திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் துறை சார்பில், தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். பேராசிரியர் உக்ரவேல் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் ராஜகண்ணு வரவேற்றார். பேராசிரியர்கள், இளநிலை, முதுகலை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், தொழில் முனைவு குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement