நெய்வேலியல் கலைஞர் நுாலகம் அமைச்சர், எம்.எல்.ஏ., திறப்பு

நெய்வேலி: நெய்வேலி இந்திரா நகரில், கலைஞர் நுாலகம் திறப்பு விழா நடந்தது.

சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் குமார் வரவேற்றார். அமைச்சர் கணேசன் பங்கேற்று நுாலகத்தை திறந்து வைத்தார்.

நெய்வேலி சட்டசபை தொகுதி பார்வையாளர் இளையராஜா, பண்ருட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜேஷ், சதாம், துரைராஜ், பாரதிராஜா, என்.எல்.சி.,_தொ.மு.ச., பொதுச்செயலாளர் பாரி, பொருளாளர் ஐயப்பன கலந்து கொண்டனர்.

Advertisement