15 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடைகள், வீடுகள், கோடவுன்களில் பதுக்கி வைத்திருந்த 15 டன் தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று குழிதோண்டி புதைத்து அழித்தனர்.
திண்டுக்கல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் தடை புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அவர்களும் எல்லா பகுதிகளிலும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து கடைகள், வீடுகள், கோடவுன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் 6 மாதமாக தொடர்ச்சியாக நடந்த பறிமுதல் நடவடிக்கையால் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை கோடவுனில் 15 டன் தடை புகையிலை பொருட்கள் சேகரமானது.
பின் இதை அழிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் இன்று( மார்ச் 14) திண்டுக்கல் பழநி ரோடு முருகபவனம் குப்பை கிடங்கில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜாபர்சாதிக், சரவணக்குமார், முருகன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் குப்பை கிடங்கில் 10 ஆழத்திற்கு மண் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி பறிமுதல் செய்யப்பட்ட 15 டன் புகையிலை பொருட்களை அதில் கொட்டி அழித்தனர். அதை யாரும் எடுக்ககூடாது என்பதற்காக பள்ளத்தில் மணலை நிரப்பினர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் புகையிலை விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்; மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது
-
பங்குனி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோவில்!
-
ஹோலி..ஜாலி..
-
உக்ரைன்- ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்பு: டிரம்ப்
-
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை; திவால் நிலையை நோக்கி செல்லும் மாலத்தீவுகள்
-
சென்னையில் த.வெ.க., பொதுக்குழு கூட்டம்: மார்ச் 28ல் நடக்கிறது