குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் திடீர் தீ; 3 பேர் கருகி பலி

ராஜ்கோட்; குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
ராஜ்கோட் பகுதியில் 12 மாடிகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. இதில ஏராளமானோர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று குடியிருப்பின் 6வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்புத்துறைக்கு குடியிருப்புவாசிகள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது அந்த வளாகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோரை அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர். ஆனால், எதிர்பாராதவிதமாக 3 பேர் தீயில் சிக்கி பலியாகினர். ஒருவரை காணவில்லை என்று தெரிகிறது.
சிறிதுநேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அவர்கள் முழுவதுமாக அணைத்தனர். இது குறித்து எஸ்.பி., சவுத்ரி கூறுகையில், தீ விபத்து குறித்து, தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றுவிட்டோம். எதிர்பாராத விதமாக 3 பேர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். ஒருவரை காணவில்லை, தேடி வருகிறோம் என்று கூறினார்.
தீ விபத்துக்கு உரிய காரணம் என்ன என்பது பற்றிய எந்த தகவலும் வெளியாக வில்லை. இருப்பினும், மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறே காரணமாக இருக்கக்கூடும் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும்
-
மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்; மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது
-
பங்குனி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோவில்!
-
ஹோலி..ஜாலி..
-
உக்ரைன்- ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்பு: டிரம்ப்
-
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை; திவால் நிலையை நோக்கி செல்லும் மாலத்தீவுகள்
-
சென்னையில் த.வெ.க., பொதுக்குழு கூட்டம்: மார்ச் 28ல் நடக்கிறது