மே.வங்கத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் உயிரிழப்பு

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் அதிவேகமாக கார் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், சாப்ரா பகுதியில் சிலர் கடைக்கு சென்று விட்டு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாவில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்திசையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, ரிக்ஷா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பெண்கள் 3 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்; மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது
-
பங்குனி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோவில்!
-
ஹோலி..ஜாலி..
-
உக்ரைன்- ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்பு: டிரம்ப்
-
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை; திவால் நிலையை நோக்கி செல்லும் மாலத்தீவுகள்
-
சென்னையில் த.வெ.க., பொதுக்குழு கூட்டம்: மார்ச் 28ல் நடக்கிறது
Advertisement
Advertisement