சிறையில் மோதலை தடுக்க கைதிகளுக்கு கட்டுப்பாடு
சென்னை:சிறை வளாகத்தில் கைதிகள் இருக்கும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், சென்னை புழல் உட்பட, 142 சிறைகள் உள்ளன. இவற்றில், 21 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளுக்குள் மோதல், சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கைளை தடுக்க, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிறைகளில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், காலை 6:00 முதல் மாலை, 5:45 மணி வரை திறந்து வைக்கப்படும். காலை 6:00 - 8:00க்குள் கைதிகள் குளித்து விட்டு அறைக்கு திரும்பி விட வேண்டும். அதன்பின், காலை உணவு வழங்கப்படும். மதிய உணவு பகல், 11:30 மணிக்கு தயாராகி விடும்.
மதிய உணவுக்கு பின், காற்றோட்டமுள்ள இடங்களில் அமர்ந்து பேச, கைதிகள் அனுமதிக்கப்படுவர். மாலை, 5:45க்குள், அவர்கள் தங்களுக்கான அறைக்கு திரும்பி விட வேண்டும். இந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டு உள்ளது. சிறை உள்வளாகத்தில், கைதிகள் நடமாடும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணமாக, அவர்களுக்கான குளியல், உணவு நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறைகளில் இருந்து வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே, அவர்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுவர். அதுவும் ஒவ்வொரு குழுவாக அனுமதிக்கப்படுவர் என, கூடுதல் டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?