கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

புதுடில்லி: இணையத்தில் தேடுவதற்காக 'குரோம்' எனப்படும் கூகுள் பிரவுசரின் பழைய பதிப்பை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், 'சி.இ.ஆர்.டி., இன்' எனப்படும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழு செயல்படுகிறது.
இது சைபர் அச்சுறுத்தல்களான ஹேக்கிங் எனப்படும் கணினியை முடக்குவது, தரவுகளை திருடுவது போன்றவற்றை கண்காணித்து தடுக்கிறது. தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கணினியில் விண்டோஸ் உள்ளிட்ட இயங்குதளங்களில் கூகுள் குரோம் பிரவுசரின் தற்போதைய பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பதிவாகியுள்ளது.
இதை பயன்படுத்தி ஹேக்கர்கள் கணினியில் உள்ள தகவல்களை திருட முடியும். இதை தடுக்க, கணினியில் தற்போதைய பதிப்பு குரோம் பிரவுசரை நிறுவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.






மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !