தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டர் கான்கிரீட்மேடையில் விரிசல்


தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டர் கான்கிரீட்மேடையில் விரிசல்


கோபி, பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனமாக, 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இதில் தடப்பள்ளி வாய்க்காலில் பாரியூர் அருகே உருளை என்ற இடத்தில் கூகலுார் கிளை வாய்க்கால் பிரிகிறது.
இப்பகுதியில் நீர் நிர்வாகத்துக்காக தடப்பள்ளி வாய்க்காலுக்கு மூன்று ஷட்டர், கூகலுார் கிளை வாய்க்காலுக்கு இரு ஷட்டர் உள்ளது.
இதில் தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டரை தாங்கி நிற்கும் கான்கிரீட் மேடையில் விரிசல் விழுந்துள்ளது.ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கும்போதே, அதன் கட்டமைப்பை பலப்படுத்த, நீர்வள ஆதாரத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement