கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு மீட்பு

நத்தம்: சேத்துார்- அய்யாபட்டியை சேர்ந்தவர் பச்சைமுத்து 50. சொந்தமாக பசுமாடு ஒன்று வளர்த்து வருகிறார். மாடை வழக்கம் போல் வயல் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்த போது

எதிர்பாராத விதமாக அருகே இருந்த விவசாய தோட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்தது. நத்தம் தீயணைப்பு உதவி அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட வீரர்கள் மண்அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

Advertisement