பட்டாசு ஆலையில் ஆய்வு

நத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு , கோடை கால பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள திண்டுக்கல் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் உள்ள

பட்டாசு ஆலையில் மாவட்ட தீ தொழிலக பாதுகாப்பு குழு துணை இயக்குனர் அமர்நாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உதவி இயக்குனர் மணிமாறன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சதீஸ்குமார்,தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன், வருவாய் ஆய்வாளர் துர்காதேவி உடனிருந்தனர்.

Advertisement