கல்லுாரி தின விழா
மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் 60ம் ஆண்டு விழா துணைத் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது. செயலாளர் சுந்தர் வரவேற்றார். நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் வாழ்த்தி பேசினார். முதல்வர் ராமமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற 294 மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் பி.ஏ.எம்.சி., மருத்துவமனை டாக்டர் புகழேந்தி பாண்டியன் பேசுகையில், 'மாணவர்கள் 'நா'வன்மை மிக்கவர்களாக திகழ வேண்டும். அதோடு கருத்தாழமும் வேண்டும்' என்றார்.
நடராஜ் ஆயில் மில்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் செந்தில்நாதன் பேசுகையில், 'இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்காமல் தொழில்முனைவோராக மாறி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.'என்றார். மாணவர்கள் கலைநிகழ்ச்சியை பேராசிரியர்கள் வினுப்பிரபா, பிரெட்ரிக் ஒருங்கிணைத்தனர். பொருளாளர் நல்லதம்பி நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகரன், முத்துராயர் ஏற்பாடுகளை செய்தனர். துணை முதல்வர் செல்வமலர், சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஸ்ரீதர், நாடார் மஹாஜன சங்க செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?