அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்; எலான் மஸ்க் நம்பிக்கை

வாஷிங்டன்: 'ஸ்பேஸ் எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் ராக்கெட் அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும்' என எலான் மஸ்க் தெரிவித்தார்.
மார்ச் 14ம் தேதி 2002ம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அதன் 23வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்ப மும்முரம் காட்டி வருகிறது. கடந்த 8 முறையாக, 'ஸ்பேஸ் எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் திட்டம் தோல்வி அடைந்தது.
மார்ச் 7ம் தேதி ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. இந்நிலையில் 'ஸ்பேஸ் எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அடுத்த ஆண்டு (2026) இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும்' என எலான் மஸ்க் தெரிவித்தார். செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ஸ்டார்ஷிப்பில் மனித ரோபோவும் சேர்த்து அனுப்பப்பட உள்ளது.
அதேநேரத்தில், 2029ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தரையிறங்கலாம். இது 2031ம் ஆண்டிற்குள் கட்டாயமாக நடக்க வாய்ப்புள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அனுப்பிய நாடுகள்!
செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பிய நாடுகளில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மற்றும் யு.ஏ.இ., ஆகியவை அடங்கும்.
கடந்த 2013ல் மங்கள்யான் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பியது. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக் கோள் அனுப்பிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
2020ல் சீனா, யு.ஏ.இ., செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியது.

மேலும்
-
தமிழை அறிமுகம் செய்த பேராசிரியர்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நெகிழ்ச்சி
-
தமிழக தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையமா? அன்புமணி கண்டனம்
-
கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா?: ரூபாய் குறியீடை மாற்றிவிட்டு மற்ற மொழிகளுக்கு அருங்காட்சியமா?
-
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா: ரூ.12 லட்சம் பங்கு பத்திரத்துடன் தவித்தவருக்கு கை மேல் கிடைத்தது உதவி
-
எட்டாவது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்ன?
-
அரசு கட்டுமான பணியில் தரம் முக்கியம்; சில இடங்களில் தரம் இல்லை என்கிறார் சிதம்பரம்!