வரும் 19-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என தகவல்

4


வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், 59, மற்றும் புட்ச் வில்மோர், 62, வரும் 19-ம் தேதியன்று பூமிக்கு திரும்புவர் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு (2024) ஜூன் 5ம் தேதி, சர்வதேச 'ஸ்டார்லைனர்' விண்கலம் வாயிலாக விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
அங்கு எட்டு நாட்கள் ஆய்வு பணிகளைமுடித்துவிட்டு திரும்ப திட்டமிட்டனர். திடீரென ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.

இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' விண்வெளி நிறுவனத்தின் வாயிலாக மீட்க 'பால்கன் -- 9' ராக்கெட் உடன், 'டிராகன்' விண்கலம் கடந்த சில தினங்களுக்கு முன் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது.
டிராகன் விண்கலம் வாயிலாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் வரும் 18-ம் தேதியன்று புறப்படத்துவங்கி 19-ம் தேதியன்று (புதன்கிழமை ) பூமி திரும்புவர் என்று கூறப்படுகிறது. பூமி திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement