இந்தியாவுக்கு 2 பதக்கம்: குளிர்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்கில்

டுரின்: ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 2 பதக்கம் கிடைத்தன.
இத்தாலியில், அறிவுசார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. இதில் 'ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங்-222 மீ.,' பைனல் 'எப்02' பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை ஜியாரா போர்ட்டர், வெள்ளி வென்றார். ஏற்கனவே இவர், 'ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங்-111 மீ.,' பைனல் 'எப்01' பிரிவில் வெள்ளி வென்றிருந்தார்.'ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங்-777 மீ.,' பைனல் 'எம்02' பிரிவு பைனலில் இந்திய வீரர் தான்ஷு வெண்கலம் கைப்பற்றினார்.
இதுவரை இந்தியாவுக்கு 8 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் கைப்பற்றியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement