கும்பாபிஷேகம் தொடர்பாக இரு சமூகத்தினர் மோதல்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கோவிலுார் கிராமத்தில் உள்ள பாலபுரீஸ்வரர் திருக்கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இரு சமூகங்களுக்கு இடையே முரண்பாடு நீடித்து வந்தது.

ஒரு தரப்பினர், கோவில் சுற்றுச்சுவரின் மீது பிளக்ஸ் பேனர் ஒட்டியதாகக் கூறி, நேற்று முன்தினம் இரவு திடீரென புதுக்கோட்டை -- பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி போலீசார் பேச்சு நடத்திய பின், மறியலை கைவிட்டு கோவிலில் காத்திருந்தனர். இரு தரப்பினரும் சமாதானம் ஆகாததால், புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., ஐஸ்வர்யா, ஆலங்குடி டி.எஸ்.பி., கலையரசன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.

நேற்று காலை பிளக்ஸ் பேனரை அகற்றிய பின், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement