காஞ்சி வரதர் கோவில் பிரகாரத்தில் ‛கூலிங் பெயின்ட்' அடிக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோடை வெயிலின்போது, கோவில் பிரகாரத்தில் நடந்து செல்லும் பக்தர்களின் பாதங்கள் வெயிலில் சுடாமல் இருக்க, பிரகார தரையில், 'கூலிங் பெயின்ட்' தீட்டப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு கோடை வெயிலின்போது, தரையில் பூசப்பட்ட, 'கூலிங் பெயின்ட்' பூச்சுகள் மழையின் காரணமாகவும், கடுமையான வெயில் காரணமாக ஆங்காங்கே உதிர்ந்த நிலையில் உள்ளது.

சில நாட்களாக காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வரதராஜ பெருமாள் கோவில் பிரகார தரையில் உள்ள சூடு காரணமாக, பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதில், முதியவர்கள், பெண்கள் , குழந்தைகள் சூடான தரையில் நடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, கோவில் வெளி பிரகாரத்தில், ‛கூலிங் பெயின்ட்' அடிக்க வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement